சிதம்பரத்தில் ஆட்டோ டிரைவர்களை பிடித்து எச்சரிக்கை விடுத்த டிஎஸ்பி!
சிதம்பரம் நகரில் கூடுதலாக பள்ளி மாணவர்களையும், பயணிகளையும் ஏற்றிச் சென்ற ஆட்டோக்களை


சிதம்பரம் நகரில் கூடுதலாக பள்ளி மாணவர்களையும், பயணிகளையும் ஏற்றிச் சென்ற ஆட்டோக்களை சிதம்பரம் டிஎஸ்பி மற்றும் போக்குவரத்து போலீஸார் பிடித்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.
சிதம்பரம் நகரில் ஆட்டோக்களில் அதிகமான பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்வதாக டிஎஸ்பி ஆர்.ராஜாராமிற்கு புகார் வந்தது. அதனடிப்படையில் டிஎஸ்பி உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீஸார் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டு சுமார் 30 ஆட்டோக்களை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் ஆட்டோ டிரைவர்களை அழைத்து ஆட்டோக்களை பெரியவர்கள் மூன்று பேரும், மாணவர்கள் 5 பேருக்கும் மேல் ஏற்றக் கூடாது என்றும் ஆட்டோ டிரைவர்கள் சீருடை கட்டாயம் அணிய வேண்டும். இல்லையெனில் வெள்ளிக்கிழமை முதல் ஆட்டோக்களை பிடித்து லைசென்ஸ் மற்றும் பர்மிட் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆட்டோக்கள் மேற்கண்ட உத்தரவை சரியாக செயல்படுத்துகிறார்களா என போலீஸார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்து ஆட்டோ மற்றும் டிரைவர்களை அனுப்பி வைத்தார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரவன் (சட்டம்-ஒழுங்கு), சக்திவேல் (போக்குவரத்து), தனிப்பிரிவு தலைமைக்காவலர் செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...