சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள குடியிருப்பில் தீ விபத்து
சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள அழகர்சாமிக்கு சொந்தமான குடியிருப்பில் 2வது மாடியில் கார்த்திகேயன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று காலை திடீரென தீப்பிடித்து பொருள்கள் எரிந்தது. தகவல் அறிந்த


சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள குடியிருப்பில் உள்ள வீடு ஒன்று இன்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள அழகர்சாமிக்கு சொந்தமான குடியிருப்பில் 2வது மாடியில் கார்த்திகேயன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று காலை திடீரென தீப்பிடித்து பொருள்கள் எரிந்தது. தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். தீவிபத்தில் வீட்டிலிருந்து டீவி, ரெப்ரிஜிரேட்டர் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமுற்றன. தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் நகர போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு தீவிபத்து எப்படி ஏற்பட்டது என விசாரணை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...