ஸ்ரீமுஷ்ணத்தில் மதுப்பாட்டில்களால் குத்தி விதவை பெண் கொலை!
ஸ்ரீமுஷ்ணம் அருகே வாலீஸ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கலிசாமேரி (45). இவரது கணவர் ஜான்பீட்டர் இறந்துவிட்டதால் கலிசாமேரி தனியாக வசித்து வந்தார். விவசாய கூலி வேலை செய்து வரும் இவர் வீட்டின்


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வாலீஸ்பேட்டை என்ற கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் விதவை பெண்மணி ஒருவர் வாய் மற்றும் மர்ம உறுப்புகளில் மதுபாட்டில்களால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே வாலீஸ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கலிசாமேரி (45). இவரது கணவர் ஜான்பீட்டர் இறந்துவிட்டதால் கலிசாமேரி தனியாக வசித்து வந்தார். விவசாய கூலி வேலை செய்து வரும் இவர் வீட்டின் அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் வாய் மற்றும் மர்ம உறுப்புகளில் மதுபாட்டில்களால் குத்திக் கொலை செய்யப்பட்டு இன்று காலை இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தேச்சியாத்தோப்பு டிஎஸ்பி ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கலிசாமேரி மர்ம கும்பலால் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...