தனியார் மின் நிலைய பாய்லரிலிருந்து கீழே விழுந்து ஒருவர் சாவு
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை கரிக்குப்பம் கிராமத்தில் ஐ.எல்.எஃப்.எஸ் தனியார் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் பீகார் மாநிலம் முசாபூர்


சிதம்பரம் அருகே தனியார் அனல் மின் நிலையத்தில் 62 அடி மீட்டர் உயரமுள்ள பாய்லரிலிருந்து தவறி கீழே விழுந்து பீகாரைச் சேர்ந்த ஒருவர் இறந்தார்.
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை கரிக்குப்பம் கிராமத்தில் ஐ.எல்.எஃப்.எஸ் தனியார் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் பீகார் மாநிலம் முசாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திரகுமார் (22) சனிக்கிழமை மாலை இந்நிலையத்தில் 62 மீட்டர் உயரமுள்ள பாய்லர் அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது பாய்லர் உச்சியிலிருந்து தவறி கீழே விழுந்து தலைமையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். பாதுகாப்பு கவசத்தை சரியாக அணியாததால் அடிபட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...