இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கென பள்ளி நேரத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் சில வழித்தடங்களில் போதிய பேருந்துகள் இன்றி மாணவ, மாணவியர்கள்

News image
Updated On :7 ஜூலை 2013, 1:20 pm

G.Sundararaj

பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கென பள்ளி நேரத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் சில வழித்தடங்களில் போதிய பேருந்துகள் இன்றி மாணவ, மாணவியர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இலவச பஸ் பாஸ் என்பதால் பஸ் நிறுத்தத்தில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் சில  ஓட்டுநர்கள் பஸ் நிறுத்தத்திற்கு முன்பே அல்லது சற்று தள்ளியே பேருந்துகளை நிறுத்துவதால் மாணவ, மாணவியர்கள் பேருந்துகளில் ஏற முடியவில்லை. மேலும் ஸ்மார்ட் கார்டு திட்டம் அமுல்படுத்தப்படுவதால் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை-எளிய கிராமப்புற மாணவர்கள் கட்டணம் செலுத்தி பேருந்துகளில் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சனைக்கு தீர்வு காண கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் போக்குவரத்துக்கழக மேலாளர், காவல்துறை அதிகாரிகள் பெற்றோர்கள் கொண்டு வட்டார அளவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி பள்ளி நேரங்களில் கூடுதலான பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சிதம்பரம் நகரில் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நந்தனார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி, ஆறுமுகநாவலர் மேல்நிலைப்பள்ளி, பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி, ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 8 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் பயில தினமும் பேருந்துகளில் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி தொடங்கும் நேரத்தில், முடியும் நேரத்திலும் கூடுதலான பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து செல்ல முடியாமல் மாணவ, மாணவியர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே கிராமப் புறங்களிலிருந்து சிதம்பரம் நகருக்கும் தினமும் ஒவ்வொரு வழித்தடத்திலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.