அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஇ படிப்பிற்கான கவுன்சிலிங் ஜூலை 3-ம் தேதி தொடங்கி ஜூலை 7-ம் தேதி முடிவுற்றது. இதில் 1437 பேருக்கு (பிஇ-அனைத்து பாடப்பிரிவுகளுக்கும்) அனுமதி சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்கள் ஜூலை 12-ம் தேதிக்குள் சேர்க்கைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. முதல் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்க இயலாத மாணவ, மாணவியர்கள் நலன் கருதி, மீண்டும் ஒரு வாய்ப்பளிக்கும் விதமாக 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 15-ம் தேதி பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் நடைபெறுகிறது. பிஇ படிப்பிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வருகிற ஜூலை 22-ம் தேதி தொடங்கப்படும்.