கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நீதியரசர் சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க இளவரசன் பெற்றோர்கள் எதிர்ப்பு

தருமபுரியில் திவ்யாவை கலப்பு திருமணம் செய்து கொண்ட இளைஞர் இளவசரன், மரணம் அடைந்ததில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் முறையிட்டதை அடுத்து, அவரது மரணம் குறித்து விசாரணை

News image
Updated On :8 ஜூலை 2013, 10:53 am

ரவி

தருமபுரியில் திவ்யாவை கலப்பு திருமணம் செய்து கொண்ட இளைஞர் இளவசரன், மரணம் அடைந்ததில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் முறையிட்டதை அடுத்து, அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சிங்காரவேலு தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நீதியரசர் சிங்காரவேலு தலைமையில் ஆணையம் அமைப்பதற்கு இளவரசன் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீதியரசர் சிங்காரவேலு தலித் இனத்திற்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு உண்டு.எனவே அவருக்கு பதிலாக ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.