சிதம்பரத்தில் புதிய திரைப்பட சிடிக்கள் தயாரித்த 5 பேர் கைது
சிதம்பரம் நகரில் புதிய திரைப்பட சிடிக்கள் அதிகளவில் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையில் போலீஸார் தனிப்படை அமைத்து திடீர் சோதனை


சிதம்பரத்தில் புதிய திரைப்பட சிடிக்கள் தயாரித்த 5 பேரை போலீஸார் இன்று கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சிடிக்கள் தயாரிக்க உபயோகித்த ரூ.இரண்டரை லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர் மற்றும் டிவிக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம் நகரில் புதிய திரைப்பட சிடிக்கள் அதிகளவில் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையில் போலீஸார் தனிப்படை அமைத்து திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சிதம்பரம் பஸ் நிலையம், மாரியம்மன்கோயில் தெருவை உள்ளிட்ட 5 இடங்களில் புதிய திரைப்படி சிடிக்கள் தயாரித்து விற்பனை செய்ய முயன்ற சேகர் (50),சரகோபி (33), சண்முகம் (32), செந்தில்குமார் (33), ராம்குமார் (42) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 136 புதிய திரைப்பட சிடிக்கள் மற்றும் சிடியில் திரைப்படத்தை பதிவு செய்ய பயன்படுத்திய 5 கம்ப்யூட்டர்கள், 3 டிவிக்கள், 5 டிவிடி பிளேயர்கள், சிடி ரைட்டர்கள், கலர் ஜெராக்ஸ் மிஷின் உள்ளிட்ட பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ இரண்டரை லட்சமாகும். இதுகுறித்து நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...