இந்த ஆர்ப்பாட்டம் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி ஆணைப்படி பல்வேறு இடங்களில் நடத்தப்படுகிறது. எங்களது கோரிக்கை சேது சமுத்திர கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். தமிழகத்திற்கு வரக்கூடிய அத்தனை வளமங்களும் இத்திட்டத்தின் மூலம் வர வேண்டும். இதனை எதிர்க்கக்கூடிய அத்தனை பேரையும் இந்த ஆர்ப்பாட்டத்தின் வழியாக கண்டிக்கிறோம். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போகக்கூடிய கப்பல்கள் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி ஏற்படும், பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நிச்சயமாக இலங்கை அரசு இந்திய நாட்டின் தயவை எதிர்பார்க்கும் நிலை இருக்கும் போது நமது கோரிக்கைகளையும், உணர்வுகளையும் நிச்சயம் புரிந்து கொண்டு செயல்படுவார்கள் என்றார் கனிமொழி. திமுக, அதிமுக ரகசிய உடன்பாடு என விஜயகாந்த் கூறியது குறித்து கேட்ட போது அந்த உடன்பாடு பற்றி தெரியாது. அதற்குள் போகவும் விரும்பவில்லை என அவர் தெரிவித்தார்.