மழை வேண்டி சிதம்பரம் தில்லைகாளிக்கு மகாபிஷேகம்
சிதம்பரம் எல்லையில் வீற்றுள்ள ஸ்ரீதில்லைக்காளிக்கு அமாவாசையை முன்னிட்டு மழை வேண்டி சிறப்பு மகாஅபேஷகமஸ்ரீ் மற்றும் 145வது அர்த்தசாம பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.


சிதம்பரம் எல்லையில் வீற்றுள்ள ஸ்ரீதில்லைக்காளிக்கு அமாவாசையை முன்னிட்டு மழை வேண்டி சிறப்பு மகாஅபேஷகமஸ்ரீ் மற்றும் 145வது அர்த்தசாம பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி, செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் தீபம் ஏற்றி காளியை வழிபட்டால் தீராத கடன், பகைவர்கள் தொந்தரவு, பாவ ஜென்ம சாப தோஷங்கள் தீரும், சித்தம் தெளியும் என்பது ஐதீகமாகும். ஆனி அமாவாசையை முன்னிட்டு மழை வேண்டி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு சிதம்பரம் ஸ்ரீதில்லைக்காளிக்கு சிறப்பு மகாபிஷேகமும், 145-வது சிறப்பு அர்த்த சாம பூஜையும் நடைபெற்றன.
ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபிரம்மசாமுன்டி சன்னதிகளில் நெய்தீப ஆராதனையும், ஸ்ரீதில்லைக்காளிக்கு குடம், குடமாக நல்லெண்ணெய் அபிஷேகமும், தைலகாப்பு குங்கும காப்பு செய்யப்பட்டு விசானை திரவியங்கள் மற்றும் வெண்பட்டு சாற்றப்பட்டது. மேலும் வெட்டிவேர் மற்றும் விலாமுச்சு வேர்களால் ஆன சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஸ்ரீதில்லைக்காளி அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை அமாவாசை அர்த்தசாமி அபிஷேக மண்டலி நிர்வாகி எஸ்.வைத்தியநாதன் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...