இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் சுவாமி தரிசனம்!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் இன்று சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வருதை தந்தார். கிழக்கு கோபுர வாயிலில் அவரை நடராஜர் கோயில் செயலாளர் எம்.

News image
Updated On :10 ஜூலை 2013, 11:53 am

G.Sundararaj

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் இன்று வருகை தந்தார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் இன்று சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வருதை தந்தார். கிழக்கு கோபுர வாயிலில் அவரை நடராஜர் கோயில் செயலாளர் எம்.காசிராஜதீட்சிதர் தலைமையிலான பொதுதீட்சிதர்கள் மேளதாளத்துடன் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். கோயிலில் நடைபெற்ற மரகத நடராஜரான ரத்தினசபாபதி தீபாரதானையும், உச்சிகாலபூஜையினை அவர் பார்த்து தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் சித்சபை மீது ஏறி ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் ஸ்ரீநடராஜமூர்த்தியை தரிசனம் செய்தார். பொதுதீட்சிதர்கள் சிறப்பு தீபாராதனை செய்து நீதிபதிக்கு பட்டு போர்த்தி பிரசாதத்தை வழங்கினர். பின்னர் அவர் தில்லைகோவிந்தராஜப் பெருமாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டு சென்றார். கோயிலுக்கு வந்த தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வாலை கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ஆர்.ராதிகா, வட்டாட்சியர் எம்.விஜயா, சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், கோயில் செயல்அலுவலர் கே.கிருஷ்ணகுமார் ஆகியோர் வரவேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.