லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகரில் சிக்கிய 400 டெட்டனேட்டர்கள்: போலீஸார் தீவிர விசாரணை

விருதுநகர் அருகே வாகனச் சோதனையின் போது அனுமதியின்றி காரில் கொண்டு வந்த வெடிபொருள்களான 400 டெட்டனேட்டர்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

News image
Updated On :11 ஜூலை 2013, 11:06 am

விருதுநகர் அருகே வாகனச் சோதனையின் போது அனுமதியின்றி காரில் கொண்டு வந்த வெடிபொருள்களான 400 டெட்டனேட்டர்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறியதாவது: விருதுநகர்-சாத்தூர் நான்கு வழிச்சாலையில் சத்திரெட்டிபட்டி அருகே வியாழக்கிழமை போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்தனர். அப்போது, உள்ளே சந்தேகத்திற்கு இடமளிக்கும் இடத்தில் இருந்த  சாக்கு பையை பிரித்து பார்த்தனர்.

அப்போது உள்ளே பாறைகளை பிளக்க  பயன்படுத்தப்படும் வெடிபொருள்களான 400 டெட்டனேட்டர்கள் இருந்தது. பின்னர் இது குறித்து வாகனத்திற்குள் இருந்த சின்னப்பரெட்டியபட்டியைச் சேர்ந்த டிரைவர் பாலு, மதுரை அருகே பாலமேடு பகுதியைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன், வீரணன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

அதையடுத்து, ஆர்.ஆர்.நகர் அருகே கன்னிசேரிபுதூரைச் சேர்ந்த ரவிக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி கிணறு தோன்றுவதறக்கு பயன்படுத்துவதற்காக வெடிபொருள்களை கொண்டு செல்வதாக போலீஸார் விசாரணையில் தெரிவித்தனர். ப பின்னர், அரசு அனுமதியின்றி வெடிபொருள்களை வாகனத்தில் கொண்டு சென்றது தொடர்பாக பாண்டியன் நகர் காவல் நிலைய போலீஸார் 3 பேரையும் கைது செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். அதோடு, டெட்டனேட்டர்கள் மற்றும் வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.