இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிதம்பரம் அருதே தீவிபத்து: 10 வீடுகள் எரிந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்

சிதம்பரம் அருகே உள்ள சித்தேரி கிராமத்தில் கிருபானந்தம் என்பவரது வீட்டில் சமையல் செய்யும் போது கூரையில் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. பலத்த காற்று வீசியதால் தீ மள, மளவென பரவி

News image
Updated On :12 ஜூலை 2013, 12:47 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட தீவிபத்தில் 10 வீடுகள் எரிந்து சேதமுற்றன. தீவிபத்தில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்தன.

சிதம்பரம் அருகே உள்ள சித்தேரி கிராமத்தில் கிருபானந்தம் என்பவரது வீட்டில் சமையல் செய்யும் போது கூரையில் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. பலத்த காற்று வீசியதால் தீ மள, மளவென பரவி அருகாமையிலிருந்த செல்வம், ரவி, ராயர், ஆதிவராகன், மணிமுத்து, பழனிசாமி, ராமானுஜம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது வீடுகளும் எரிந்து சேதமுற்றன. தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இத்தீவிபத்தில் 10 வீடுகளிலும் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமுற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.