இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

காட்டுமன்னார்கோயிலில் தீவிபத்து: 31 வீடுகள் எரிந்து சேதம்

காட்டுமன்னார்கோயில் அருகே வடவாறு கரையோரம் உள்ள காந்தியார்தெருவில் இருளர் சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் வடிவேலு என்பவரது வீட்டில் சனிக்கிழமை மதியம்

News image
Updated On :13 ஜூலை 2013, 1:18 pm

G.Sundararaj

காட்டுமன்னார்கோயில் அருகே இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் 31 வீடுகள் எரிந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமுற்றன.

காட்டுமன்னார்கோயில் அருகே வடவாறு கரையோரம் உள்ள காந்தியார்தெருவில் இருளர் சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் வடிவேலு என்பவரது வீட்டில் சனிக்கிழமை மதியம் சமையல் செய்யும் போது கூரையில்  திடீரென தீப்பிடித்தது. காற்றில் தீ மேலும் பரவி அருகாமையில் இருந்த மொத்தம் 31 வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமுற்றன.

தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில் ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். தீவிபத்தில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமுற்றன. தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ராமமூர்த்தி, வட்டாட்சியர் வெங்கடாசலம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களை காட்டுமன்னார்கோயிலில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.