வரும் 20ம் தேதி முதல் கேரள மாநிலத்துக்குச் செல்லும் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் ஜி.ஆர். சண்முகப்பா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து செல்லும் வாகனங்களை சோதனை செய்ய கேரள மாநிலத்தில் மொத்தம் 8 சோதனைச் சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்களுக்கு வாழையாறு தான் முக்கிய சோதனைச் சாவடியாகும்.
அங்கு, லாரிகள் அனுமதி பெற 10 மணி நேரம் முதல் 32 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பொருட்களை சென்று சேர்க்க முடியவில்லை. மேலும், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.
இது குறித்து கேரள அரசுக்கும், மத்திய அரசுக்கும் பல முறை கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இந்த வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினந்தோறும் வாழையாறு வழியாக சுமார் 2500 லாரிகள் இயக்கப்படுகிறது. ரூ.200 கோடி மதிப்பிலான பொருட்கள் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த வேலை நிறுத்தத்தால், ஒரு நாளைக்கு ரூ.200 கோடி பொருட்கள் தேக்கமடையும்.
இந்த பிரச்னை சரி செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவையில் ரூ.10.18 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் பறிமுதல்

வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா

மாமனாா் வீட்டுக்கு வந்த மருமகன் தற்கொலை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


