பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

மயக்க மருந்து கொடுத்து டிரைவரை கட்டிப்போட்டு கார் திருட்டு

கால் டாக்சி டிரைவரை கட்டிப்போட்டுவிட்டு காரை 4 நபர்கள் திருட்டு போனது சம்பந்தமாக ஆம்பூர் தாலுகா போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்தனர்.

Updated On :16 ஜூலை 2013, 5:48 pm

கால் டாக்சி டிரைவரை கட்டிப்போட்டுவிட்டு காரை 4 நபர்கள் திருட்டு போனது சம்பந்தமாக ஆம்பூர் தாலுகா போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்தனர்.

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் கால் டாக்சி டிரைவர் வெங்கடேசன் (44).  இவரிடம் திங்கள்கிழமை இரவு சுமார் 8 மணிக்கு 4 நபர்கள் தொடர்பு கொண்டு சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல வேண்டுமென வாடகைக்கு காரை கேட்டுள்ளனர்.  அதற்கு ஒப்புகொண்டு 4 நபர்களையும் அழைத்துக் கொண்டு பெங்களூர் நோக்கி சென்றுள்ளார். வேலூரை கடந்து வல்லண்டராமம் வந்தபோது சாலையோரம் காரை நிறுத்தி 4 நபர்களும் சாப்பிட்டுள்ளனர்.  டிரைவர் வெங்கடேசனுக்கும் சாப்பிட உணவு கொடுத்துள்ளனர்.  அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் வெங்கடேசனுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.  அவர் மயங்கியுள்ளார்.  

அதன்பிறகு செவ்வாய்க்கிழமை அதிகாலை அவருக்கு விழிப்பு வந்தபோது ஆம்பூர் அருகே வெங்கிளி கிராமத்தில் சாலையோரம் இருந்த மாந்தோப்பில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளார்.   உணவில் மயக்க மருந்து கொடுத்து தான் மயக்கமடைந்த பிறகு அந்த நபர்கள் காரை திருடிச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.  அவர் ஆம்பூர் தாலுகா போலீஸில் புகார் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.