2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிதம்பரத்தில் உள்ள தீர்த்த குளங்களை தூர்வார அனுமதி கோரி இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் மனு!

சிதம்பரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தீர்த்த குளங்களை தூர்வார அனுமதி கோரி இந்து ஆலய பாதுகாப்பு குழுவினர் சிதம்பரம் உதவிஆட்சியர் (பொறுப்பு), வட்டாட்சியர், நகராட்சி ஆணையர்

News image
Updated On :17 ஜூலை 2013, 1:31 pm

G.Sundararaj

சிதம்பரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தீர்த்த குளங்களை தூர்வார அனுமதி கோரி இந்து ஆலய பாதுகாப்பு குழுவினர் சிதம்பரம் உதவிஆட்சியர் (பொறுப்பு), வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் ஆகியோரை இன்று நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் எம்.செங்குட்டுவன், நிர்வாகிகள் வழக்குரைஞர் கீதா, மோகன், முத்துகணேசன், பாலகிருஷ்ணன், ஜெயா, செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் நகரில் உள்ள தீர்த்த குளங்களை தூர்வார அனுமதி கோரி உதவிஆட்சியர் நேர்முக உதவியாளர் தில்லைகோவிந்தன், வட்டாட்சியர் எம்.விஜயா, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் ஆகியோரை இன்று சந்தித்து மனு அளித்தனர்.

மனுவில்: சிதம்பரம் வட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து போய் உள்ளது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், மழைநீர் சேகரிப்பு திட்ட பயனை வலியுறுத்தி இன்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழக முதல்வரின் மழைநீர் சேகரிப்பு திட்டம் முழுமையாக வெற்றி பெற இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் முதல் கட்டமாக சிதம்பரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஓமக்குளம், யானைக்குளம் (1-வது வார்டு), அண்ணான்குளம் (பைசல் மஹால் எதிரில்) ஆகிய மூன்று குளங்களையும் தூர் வார அனுமதி அளிக்க வேண்டும் என மனுவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.