வடகரை கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த கோரிக்கை

ஆம்பூர் அருகே வடகரை கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரி வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு பாலாறு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
Updated on
1 min read

ஆம்பூர் அருகே வடகரை கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரி வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு பாலாறு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

வடகரையை சேர்ந்த நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு அனுப்பியுள்ள மனு : ஆம்பூர் தாலுக்கா வடகரை கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.   அந்த கடை அமையுள்ள பகுதி வழியாக சுற்றுப்புற 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சென்று வரும் பொது வழியாகும்.  மேனிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அந்த வழியை கடந்து தான் செல்ல வேண்டும். 

அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும்.  தற்போது டாஸ்மாக் கடை அமைய உள்ள பகுதியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் மணியாரகுப்பம் கூட்டு ரோடில் ஏற்கனவே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.   எனவே அருகாமையிலேயே மேலும் ஒரு டாஸ்மாக் கடை வடகரை கிராமத்தில் அமைப்பதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்.   எனவே புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமென அப்பகுதி மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என மனு மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com