சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறக்க கடலூர் மாவட்ட பாமக கோரிக்கை
கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழுக்கூட்டம் சிதம்பரம் அழகானந்தம் முதலியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் வேணு.


சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையை உடன் திறக்க வேண்டும் என தமிழகஅரசை வலியுறுத்தி கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழுக்கூட்டம் சிதம்பரம் அழகானந்தம் முதலியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் வேணு.புவனேஸ்வரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் பூக்கடை கண்ணன், ரா.வேலு, சோ.இளவரசன், கார்த்தி, மு.சிவக்குமார், பேரூர் செயலர் செல்வி பிரிதிவ், கவுன்சிலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலர் முத்து.குமார் வரவேற்றார். மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தேவதாஸ்படையாண்டவன், பேராசிரியர் செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். நகரத் தலைவர் பெ.க.அருள் நன்றி கூறினார்.
கூட்டத்தில் ஜூலை 26 சிதம்பரத்தில் நடைபெறும் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பொதுக்குழுவிற்கு வருகை தரும் அன்புமணிராமதாஸிற்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது; பாமகவினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை தமிழகஅரசு வாபஸ் பெற வேண்டும்; பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்த மத்திய, மாநில அரசுகளை கோருவது; சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிலுவையில் உள்ள கரும்பு கிரயைத் தொகையை விவசாயிகளுக்கு உடனே வழங்கிட வேண்டும்; வருகிற நாடாளுமன்றத் தேர்கலில் பாமக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் பாமக வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...