சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

திருச்செந்தூர் அருகே 280 மதுபாட்டில்கள் பறிமுதல்

திருச்செந்தூர் அருகே டாஸ்மாக் பார்களில் அனுமதியின்றி விற்பனை செய்யவிருந்த 281 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Updated On :21 ஜூலை 2013, 5:36 pm

திருச்செந்தூர் அருகே டாஸ்மாக் பார்களில் அனுமதியின்றி விற்பனை செய்யவிருந்த 281 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருச்செந்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் டாஸ்மாக் பார்களில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை டாஸ்மாக் பார்களில் சோதனை நடத்திட உத்திரவிட்டார். திருச்செந்தூர் தாலுகா காவல் ஆய்வாளர் கோ.பத்மநாபன் பிள்ளை, உதவி ஆய்வாளர்கள் ஜெயக்குமார், அய்யாச்சாமி உள்ளிட்ட காவல்துறையினர் காயாமொழி மற்றும் பள்ளிப்பத்து டாஸ்மாக் கடை பார்களில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அனுமதியின்றி மது விற்றுக்கொண்டிருந்த வடக்கு பள்ளிபத்தைச் சேர்ந்த சித்திரை (55) என்பவரிடமிருந்து 9 மது பாட்டில்களும், வனமுத்து (55) என்பவரிடமிருந்து 271 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.