அகில இந்திய அஞ்சல் துறை எஸ்.சி., எஸ்.டி நல ஊழியர் சங்கத்தின் 2-வது கோட்ட மாநாடு விருதுநகர் தலைமை அஞ்சல் அலுவலக அரங்கத்தில் இன்று நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு அகிலந்திய தலைவர் சுந்தர்ராமன் தலைமை வகித்தார். மாநில தலைவர் எம்.பெருமாள், தென்மண்டலச் செயலாளர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்புச் செயலாளர் அழகேசன், உதவி கோட்ட கண்காணிப்பு செயலாளர் வி.மாரியப்பன், மாநில ஆலோசகர் கேசவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு: கல்வி வேலைவாய்ப்பு தொடர்பான எஸ்.சி, எஸ்.டி ரிசர்வேசன் அனைத்தையும் இந்திய அரசியல் சட்ட 9-வது பிரிவில் சேர்க்க வேண்டும்.
பெருகிவரும் மக்கள் தொகைக்குகேற்ப விகிதாச்சாரத்தை உயர்த்த வேண்டும் மற்றும் மத்திய மாநில அரசு துறைகளில் காலிப்பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை கோட்டச் செயலாளர் மகாலிங்கம், கோட்ட துணைச் செயலாளர் விக்டர் ஸ்டான்லி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

