சேரன்மகாதேவி அருகே இளைஞர் வெட்டிக் கொலை: உறவினர் மறியல்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே தரமில்லாத திட்டப்பணிகள் மேற்கொள்வதாக புகார் தெரிவித்த இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து


திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே தரமில்லாத திட்டப்பணிகள் மேற்கொள்வதாக புகார் தெரிவித்த இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. போலீஸார் குவிக்கப்பட்டனர்.
சேரன்மகாதேவி ஒன்றியம், கூனியூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் இசக்கிமுத்து. இவரது மனைவி மல்லிகா தற்போது இதே ஊராட்சியின் தலைவராக உள்ளார். கூனியூர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியைதலைவியின் கணவர் இசக்கிமுத்து செய்து வருவதாக கூறப்படுகிறது.கூனியூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சுப்பு என்றசுப்பிரமணியன் (26). இவர் விவசாயம் செய்து வருகிறார். இப்பகுதியில் கட்டப்படும் பசுமை வீடுகள் தரமில்லாமல் இருப்பதாக சுப்பிரமணியன் புகார் தெரிவித்தாராம். இதனால் இசக்கிமுத்துவுக்கும், சுப்பிரமணியனுக்கும் இடையே விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அங்கு வந்த இசக்கிமுத்துவின் தம்பி பாலசுப்பிரமணியன் மகன் முருகேசனிடம் (23), வீடு கட்டும் பணியை தரமாக செய்யுமாறு சுப்பிரமணியன் கூறினாராம். இதில் ஆத்திரமடைந்த முருகேசன்,சுப்பிரமணியனை அரிவாளால் வெட்டி விட்டு ஓடி விட்டார்.பலத்த காயமடைந்த சுப்பிரமணியனுக்கு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில்சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது மருத்துவமனை முன்பு திரண்ட சுப்பிரமணியன் உறவினர்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். போலீஸாரின் கோரிக்கையை ஏற்று மறியலை கைவிட்டனர். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுப்பிரமணியன் அங்கு இறந்தார்.
இதையடுத்து கூனியூரில் டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அதிரடிப்படை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.சேரன்மகாதேவி போலீஸார் முருகேசன், முன்னாள் ஊராட்சித் தலைவர் இசக்கிமுத்து உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...