எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாஜக ரமேஷ் கொலை: கண்டித்து ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரத்தில் கடைகள் அடைப்பு.

ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பாக இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.

News image
Updated On :22 ஜூலை 2013, 7:32 am

எல். ஐயப்பன்

ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பாக இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதியஜனதா கட்சி இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடு்த்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் பகுதிகளில் உள்ள வணிகர்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து  தங்களது கடைகளை அடைத்தனர். இதனால் இப்பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் படப்பை ஒரகடம் ஆகிய பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

அனுமதியின்றி ஆர்பாட்டம் பாஜகவினர் கைது:

பாஜக பொதுசெயலாளர் ஆடிட்டர் ரமேஷ்படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சுங்குவார்சத்திரம் பகுதியில் காவல் துறையின் அனுமதியின்றி காஞ்சிபுரம் மாவட்ட பாஜக செயலாளர் பாபு தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட பஜாகவினர் ஆர்பாட்டம் நடத்தினர். இதையடுத்து ஆர்பாட்டம் நடத்தியவர்களை சுங்குவார்சத்திரம் போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.