சிசேல் நாட்டில் உயிரிழந்த நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள காழியாய்ப்பநல்லூரைச் சேர்ந்த இளைஞரின் உடலை மீட்டுத்தருமாறு அவரது பெற்றோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொறையாறு அருகே உள்ள காழியப்பநல்லூரில் வசித்துவரும் பாலு-சுந்தரி தம்பதியர் மகன் குணசீலன் (30).இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிசேல் நாட்டில் உள்ள மமேல் என்னும் இடத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் கட்டிட தொழில் செய்து வந்துள்ளார்.இன்னும் ஒருமாதத்தில் ஊருக்கு திரும்ப உள்ளதாக அண்மையில் வீட்டுக்குக்கு தகவல் சொல்லியுள்ளார்.இந்நிலையில் குணசீலன் வேலை செய்துகொண்டிருக்கும்போது மண் சரிந்து விழுந்து உயிரிழந்துவிட்டதாக கடந்த 19 ந்தேதி தொலைபேசி மூலம் வீட்டிற்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது.உடனடியாக அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் குணசீலன் இறந்துவிட்டதாக வந்த தகவல் உண்மைதானா என்பதை உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில் பாலு-சுந்தரி தம்பதியர் காழியப்பநல்லூரில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
தங்களது மகன் எப்படி இறந்தார் என்று முழுமையாக தெரியவில்லை என்றும் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து குணசீலனின் உடலை மீட்டு விரைவில் சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.இது தொடர்பாக தமிழக முதலவருக்கும் நாகை மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனுக்கள் அனுப்பியுள்ளதாகவும் தமிழக முதலவர் தங்களுக்கு உதவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் விரைவில் இணையும்: அனைத்து இந்திய இமாம் அமைப்பு

மோடிக்கும் ஊடுருவல்காரா்களின் வாக்குகள்: மம்தா தாக்கு

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்த 4 போ் உயிரிழப்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

