2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

வேளாண் படிப்பிற்கு அதிக வேலைவாய்ப்பு உள்ளது: ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ்

வேளாண்மை படிப்பிற்கு அதிக வேலைவாய்ப்பு உள்ளது. குறிப்பாக வங்கி, காப்பீட்டுகழகங்கள் உள்ளிட்டவற்றில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது என அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகி

News image
Updated On :22 ஜூலை 2013, 2:59 pm

G.Sundararaj

வேளாண்மை படிப்பிற்கு அதிக வேலைவாய்ப்பு உள்ளது. குறிப்பாக வங்கி, காப்பீட்டுகழகங்கள் உள்ளிட்டவற்றில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது என அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் தெரிவித்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு தொடக்கவிழா இன்று நடைபெற்றது. வேளாண்புல முதல்வர் ஆர்.எம்.கதிரேசன் தலைமை வகித்தார். உதவிப் பேராசிரியர் டி.பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

விழாவில் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசியதாவது: குறிப்பாக வேளாண் படிப்பு படித்தவர்கள் அதிகம் பேர் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றுள்ளனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பாரம்பரியமிக்க பல்கலைக்கழகம். இந்த பாரம்பரியத்தை மீட்டெடுக்க தமிழக முதல்வர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். வேளாண் படிப்பிற்கு 7800 பேர் நுழைவுத்தேர்வு எழுதினர். இதில் கலந்தாய்வு மூலம் தகுதி அடிப்படையில் 1605 பேர் தேர்வு செய்யப்பட்டு அனுமதி சேர்க்கை செய்யப்பட்டுள்ளனர். தேர்வுகள் எழுதி பொறியியல் புல மாணவர்களுக்கு 80 சதவீத வருகை பதிவேடு இருக்க வேண்டும். ஆனால் வேளாண்புல மாணவர்களுக்கு 5 சதவீத சலுகை வழங்கப்பட்டு 75 சதவீதம் வருகை பதிவேடு இருக்க வேண்டும்.

நமது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் மழை பெய்யாததாலும், கர்நாடகம் நீர் திறந்துவிடாததாலும் சிதம்பரம் உள்ளிட்ட காவிரி டெல்டா பாசன பகுதிகளில் நெல் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டது. காவிரி டெல்டா பகுதிகளில் வறட்சி, வெள்ளம் என விவசாயம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்ய வேளாண் மாணவர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பல்கலைக்கழக வளாகத்தில் இதுவரை ராக்கிங் இருந்ததில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் ராக்கிங் எதி்ர்ப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. ராக்கிங் இருந்தால் மாணவ, மாணவியர்கள் அக்கமிட்டியிடமோ, விடுதி வார்டன் அல்லது பதிவாளர் மற்றும் என்னை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.

விழாவில் பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம், மாவட்ட வருவாய் அலுவலர்கள் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர், டி.கிருஸ்துராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். உதவிப் பேராசிரியர் ஆர்.சுதாகர் நன்றி கூறினார்.முன்னதாக பல்கலைக்கழக பொறியியல் புல பொன்விழா கலையரங்கில் பிஇ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. பொறியியல் புல முதல்வர் ஆர்.வேலுசாமி தலைமை வகித்தார். பேராசிரியர் ஆண்டனி ஜெயசேகர் வரவேற்றார். நிர்வாகி ஷிவ்தால்மீனா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசுகையில் பொறியியல் புலத்தில் 1437 மாணவ, மாணவியர்கள் அனமதி சேர்க்கை செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் தவறாமல் வகுப்புகளுக்கு செல்ல வேண்டும். கட்டாயம் 80 சதவீத வருகை பதிவேடு இருக்க வேண்டும். இல்லையெனில் தேர்வு எழுத முடியாது. பேராசிரியர்களும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அதிக கவனம் செலுத்தி கல்வி பயிற்ற வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.