பிஜேபி கட்சியினர் சாலை மறியல்: பெண் உள்பட 97 பேர் கைது
பிஜேபி கட்சியின் நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் கொலை செய்யப்பட்டதனைக் கண்டித்து மண்ணச்சநல்லூர் கடை வீதியில் ஒன்றியத் தலைவர் ரவிச்சநதிரன் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் சேது அரவிந்


திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் பிஜேபி கட்சியினைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்உள்பட 97 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பிஜேபி கட்சியின் நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் கொலை செய்யப்பட்டதனைக் கண்டித்து மண்ணச்சநல்லூர் கடை வீதியில் ஒன்றியத் தலைவர் ரவிச்சநதிரன் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் சேது அரவிந்த், மாவட்ட துணைத்தலைவர் அஞ்சாநெஞ்சன், ஒன்றியப் பொருளாளர் சின்னத்துரை உள்ளிட்ட 64 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
லால்குடியில் பிஜேபி மாவட்டத் தலைவர் லோகிதாசன் தலைமையில் 1 பெண் உள்பட 33 பேர் லால்குடி நால்ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுப்படவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட்ட 97 பேரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...