2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கொள்ளிடத்தில் கதவணை கட்டக்கோரி காட்டுமன்னார்கோயில்-கடலூர் வரை விவசாயிகள் வாகன பேரணி

நிலத்தடி நீர் மட்டம் உயரவும், மழை நீரை தேக்கவும்,  கொள்ளிடம் ஆற்றில் நளம்புத்தூர், மாதிரவேலூர், ம.புளியங்குடி, சித்தமல்லி, எய்யலூர், குமாரமங்கலம் ஆகிய இடங்களில் பாசன வசதிக்கும் கதவணை கட்ட

News image
Updated On :23 ஜூலை 2013, 10:10 am

G.Sundararaj

கொள்ளிடம் ஆற்றில் மழைநீரை தேக்க கதவணை அமைக்க கோரி கொள்ளிட்டம் கீழணை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் காட்டுமன்னார்கோயிலிருந்து கடலூர் வரையிலான விவசாயிகள் பங்கேற்கும் இருசக்கர வாகன பேரணி ஜூலை 26-ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி தெரிவித்தது:

நிலத்தடி நீர் மட்டம் உயரவும், மழை நீரை தேக்கவும்,  கொள்ளிடம் ஆற்றில் நளம்புத்தூர், மாதிரவேலூர், ம.புளியங்குடி, சித்தமல்லி, எய்யலூர், குமாரமங்கலம் ஆகிய இடங்களில் பாசன வசதிக்கும் கதவணை கட்ட வேண்டும். மேலும் ஜெயங்கொண்டப்பட்டினம், நானல்படுகையில் கடல்நீர் உட்புகாமல் இருக்க படுக்கை அணை கட்டப்பட வேண்டும். அணைக்கரைக்கு மேல் 7 இடத்தில் மழை நீரை தேக்க கதவணைகள் கட்ட வேண்டும். நெய்வேலி மின்சாரத்திலிருந்து 24 மணி நேர மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காட்டுமன்னார்கோயிலிருந்து கடலூர் வரை வருகிற ஜூலை 26-ம் தேதி விவசாயிகளிள் இருசக்கர வாகன பேரணி நடைபெறுகிறது என பி.விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.