2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிறப்பு புலானாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு சமதா கட்சி பாராட்டு!

பாஜக மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ், மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் ஆகியோர் இம்மாதத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கு பராமரிப்பதில் தமிழகஅரசு இரும்பு கரம்

News image
Updated On :23 ஜூலை 2013, 11:33 am

G.Sundararaj

சேலம் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை வழக்கை சிறப்பு புலானாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தமிழக சமதா கட்சி மாநிலத் தலைவர் த.தங்கவேல்நாடார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிதம்பரத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

பாஜக மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ், மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் ஆகியோர் இம்மாதத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கு பராமரிப்பதில் தமிழகஅரசு இரும்பு கரம் கொண்டு செயல்பட வேண்டும். சிறுபான்மையினர் வாக்கு வங்கியை மனதில் கொண்டு சில கட்சிகள் பெரும்பான்மையினரை கண்டு கொள்லாமல் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்க்கின்றன. அந்த வரிசையில் தமிழகஅரசும் சேர்ந்துவிடுமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.

தொண்டு மனப்பான்மை கொண்ட பாஜக பிரமுகர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. காவல்துறை சுதந்திரமாக செயல்படக்கூடிய சூழ்நிலை தமிழகத்தில் இருப்பதாக கூறும் தமிழக முதல்வர், இந்து மக்கள் வாய் மூடி பய உணர்வால் பீதியடைந்து, உரிமைகள் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற மனநிலையில் உள்ளனர் என்பதை மனதில் கொள்ள வேண்டும். பொருளாதார, கல்வி, சமூக நிலைகளில் பின்தங்கிய மக்களின் அறியாமையை பயன்படுத்தி, அவர்களை கொலைகாரகளாகவும், தவறுகளுக்கு துணை போகிறவர்களாகவும் ஆக்கும் செயல் தமிழகத்தில் அதிகரி்த்து வருகிறது. எனவே தமிழகஅரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என த.தங்கவேல்நாடார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.