மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்

கோவில்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை முன்னாள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது அரசு விரைவு பேருந்து மோதியதில், கூலித் தொழிலாளி காயமடைந்தார்.

Updated On :23 ஜூலை 2013, 6:36 pm

கோவில்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை முன்னாள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது அரசு விரைவு பேருந்து மோதியதில், கூலித் தொழிலாளி காயமடைந்தார்.

கயத்தாறு சிதம்பரனார் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் வடிவேல்(43). கூலித் தொழிலாளியான இவர், மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, இடைசெவல் அருகே உள்ள தனியார் பள்ளி முன்பு சென்று கொண்டிருந்த போது, திருநெல்வேலியிலிருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து, முன்னாள் சென்று கொண்டிருந்த வடிவேல் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மீது மோதியதாம்.

இதில் வடிவேல் பலத்த காயமடைந்தார். தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய போலீஸார் காயமடைந்தவரை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, அரசு விரைவு பேருந்து ஓட்டுநர் திருமங்கலத்தையடுத்த கல்லிக்குடி அஞ்சல் சோழம்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மகன் சிவக்குமாரிடம்(34) விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.