ராஜபாளையம் நகராட்சியில் காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இணைய தளம் வழியாக பரிந்துரை செய்யப்பட இருக்கிறது.
இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியில் பணி ஆய்வாளர், குழாய் பொருத்துநர், குழாய் திருகுநர், இளநிலை உதவியாளர், ஓட்டுநர், துப்புரவு பணியாளர், துப்புரவு பணி மேற்பார்வையாளர், நகரமைப்பு ஆய்வர் மற்றும் வருவாய் உதவியாளர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணியிடங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக இந்த நகராட்சியின் எல்லைப்பகுதியில் உள்ள தகுதியானவர்களின் பெயர் இணைய தளம் மூலம் பரிந்துரை செய்யப்பட இருக்கிறது.
எனவே உத்தேச பதிவு மூப்பு பட்டியலில் குறிப்பிட்ட பதிவு மூப்பிற்குள் விடுபட்ட பதிவுதாரர்கள் மட்டும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருகிற 25,26 ஆகிய நாள்களில் அனைத்து சான்றிதழ்களுடன் நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம். அதேபோல், பரிந்துரை செய்யப்படும் உத்தேச பதிவு மூப்பு பட்டியலினை குறிப்பிட்ட www.virudhunagar.tn.nic.in என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இணையதள முகவரியில் இடம் பெற்றுள்ள பதிவுதாரர்கள் நேரில் அலுவலகத்திற்கு வரத்தேவையில்லை என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

