தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தரங்கம்பாடி கடைவீதியில் தீவிபத்து

தரங்கம்பாடி கடை வீதியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் கடைவீதியில் வரிசையாக இருந்த 17 கடைகள், ஒரு வீடு தீப்பிடித்து எரிந்து நா

Updated On :31 ஜூலை 2013, 5:14 am

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 17 கடைகள் ஒரு வீடு முற்றிலும் எரிந்து சாமபலாயின.

தரங்கம்பாடி கடைவீதியில் நெருக்கமாக அதிகமான கடைகளும் ஒருசில வீடுகளும் உள்ளன.இப்பகுதியில் புதன்கிழமை அதிகாலை 3 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.கடலோரப் பகுதி என்பதால் காற்று மிக வேகமாக அடித்த காரணத்தால் தீ மளமளவென பரவத்தொடங்கியது.சம்பவம் குறித்து தகவலறிந்து பொறையாறு,பூம்புகார்,பிள்ளைப்பெருமாள் நல்லூர் தனியார் மின் உற்பத்தி நிலையம் ஆகிய இடங்களிலிருந்து வந்த 3 தீயணைப்பு வண்டிகள் மூலம் சுமார் 2 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.

இதில் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் குடிசை வீடும் 17 கடைகளும் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.இதில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.மேலும் அப்பகுதியில் இருந்த மின்வாரிய ஜங்க்ஷன் பெட்டி ஒன்றும் முற்றிலும் சேதமடைந்து.இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரிவில்லை. எனினும் ஒரு கடையில் அணைக்கப்படாமல் இருந்த அடுப்பிலிருந்து வந்த நெருப்பு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அப்பகுதியிலிருந்த சிலர் தெரிவித்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட இடத்தை பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ்,தரங்கம்பாடி வட்டாட்சியர் அழகர்சாமி,வருவாய் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.தீ விபத்தில் வீட்டை இழந்த கிருஷ்ணமூர்த்திக்கு அரசு சார்பில் ரூ.5 ஆயிரம் மற்றும் நிவாரணப் பொருள்களை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.