கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிவபுரி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த ஆண்டுதான் இந்த பள்ளி நடுநிலைப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த கல்வி ஆண்டு 2012-13ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள்ளியில் தேர்வு எழுதிய 15 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் குக்கிராமத்தில் உள்ள இந்த பள்ளியில் பயின்ற மாணவி பி.தேவிபாலா 441 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், எஸ்.அஞ்சு 413 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், மாணவி என்.பாரதி 406 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களை பள்ளி தலைமை ஆசிரியர் கே.குமரவேல் பாராட்டினார்.