அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கடலில் படகு கவிழ்ந்து மூன்று சிதம்பரம் மீனர்வர்கள் பலி: எம்எல்ஏ ஆறுதல்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தாண்டவராயன் சோழகன்ன்பேட்டை, நாகை மாவட்டம் வெள்ளமணல், பழையாறு, பழையப்பள்ளம் உள்ளிட்ட கிராங்களில் இருந்து சுமார் 40 பேர் ஒரு படகில் கடந்த வியழக்கிழமை நாகை மாவட்டம் பழையாறு கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டு அன்று மாலை 5 மணிக்கு

News image
Updated On :1 ஜூன் 2013, 3:00 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே நாகை மாவட்டம் எல்லையில் கடலில் மீன் பிடித்து கொண்டு வீடு திரும்பும் போது படகு கவிழ்ந்து மூன்று மீனவர்கள் இறந்தனர். தகவல் அறிந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தாண்டவராயன் சோழகன்ன்பேட்டை, நாகை மாவட்டம் வெள்ளமணல், பழையாறு, பழையப்பள்ளம் உள்ளிட்ட கிராங்களில் இருந்து சுமார் 40 பேர் ஒரு படகில் கடந்த வியழக்கிழமை நாகை மாவட்டம் பழையாறு கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டு அன்று மாலை 5 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது எதிர்பாராதவிதமாக பலத்த சூறை காற்றில் படகு நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. படகில் இருந்தவர்களை அங்கு அருகாமையில் இருந்த மீனவர்கள் மீட்டு காப்பாற்றினர். இதில் இவர்களுடன் சென்ற சிதம்பரம் அருகே உள்ள தா.சோ பேட்டையை சேர்ந்த  மதியழகன்(39), கல்யாணசுந்தரம்(42), நாகை மாவட்டம் பழையப்பள்ளத்தை சேர்ந்த மகாலிங்கம்(40) ஆகிய மூன்று மீனவர்கள் காணாமல் போனர்.பின்னர்  நேற்று(வெள்ளிக்கிழமை) காலை மூன்று பேரின் உடல் பழையாறு கடல் பகுதியில் கரை ஒதுங்கியது. மூவரின் உடல் சீர்காழி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தகவல் அறிந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தா.சோ. பேட்டை கிராமத்திற்கு நேரில் சென்று கடலில் மூழ்கி உயிரிழந்த மதியழகன், கல்யாணசுந்தரம் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்த சம்பவம் குறித்து முதல்வரை நேரில் சந்தித்து நடந்த சம்பவத்தை விளக்கி சிறப்பு நிதி பெற்று தர முயற்ச்சி செய்கிறேன் என்றும், தற்போது மீனவ நல வாரியத்தில் இருந்து வர வேண்டிய தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறவினர்களிடம் தெரிவித்தார். கடலில் மூழ்கி உயிரிழந்த மதியழகனுக்கு முத்தமிழ்ச்செல்வி என்ற மனைவியும்,  நவின்(12) என்ற மகனும், நவீனா(7) மகளும் உள்ளனர். மறைந்த கல்யாணசுந்தரத்திற்கு நிர்மலா(39) என்ற மனைவியும் கனியழகன் (19),விஜய்(17),பொன்னி(14) என்ற மகன்களும் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.