டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கல்லூரி மாணவர் விஷம் அருந்தி தற்கொலை

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய்  பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் பன்னீர்செல்வம். இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இந்நிலையில் இவர் வீட்டில் இருந்த

News image
Updated On :1 ஜூன் 2013, 10:44 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் பகுதி்யை சேர்ந்த பன்னீர்செல்வம்(21) என்ற இளைஞர் பெற்றோர் திட்டியதால் விஷம் அருந்தியதில்  மரணமடைந்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய்  பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் பன்னீர்செல்வம். இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இந்நிலையில் இவர் வீட்டில் இருந்த ரூபாய் 20ஆயிரத்தை கொடுத்து கடந்த மே-25ஆம் தேதி பழைய மோட்டார் பைக் ஒன்றை வாங்கியுள்ளார். இது குறித்து அறிந்த பன்னீர்செல்வத்தின் தந்தை ரவி குடும்ப சூழல் புரியாமல் 20ஆயிரம் கொடுத்து பைக் வாங்கி வீணடித்துள்ளாயே என்று கடிந்து பேசியிருக்கிறார்.

இதனால் மனவேதனை அடைந்த பன்னீர் செல்வம் அவர்களது பூத்தோட்டத்துக்கு சென்றுள்ளார். அங்கு செடிகளுக்கு அடிக்க வைத்துள்ள பூச்சி மருந்தை எடுத்து குடித்து உள்ளார். தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த அவர் சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்று பன்னீர்செல்வம் நேற்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு மரணமடைந்துள்ளார்.இது குறித்து பாதிரிவேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.