அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காட்டுமன்னார்கோயில் அருகே குடிநீர் கோரி சாலைமறியல்: 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள குறுக்குடி கிராமம் புளியடித்தெருவில் கடந்த மூன்று தினங்களாக குடிநீர் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காட்டுமன்னார்கோயில்

News image
Updated On :1 ஜூன் 2013, 1:59 pm

G.Sundararaj

காட்டுமன்னார்கோயில் அருகே குடிநீர் கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள குறுக்குடி கிராமம் புளியடித்தெருவில் கடந்த மூன்று தினங்களாக குடிநீர் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காட்டுமன்னார்கோயில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக சமரசம் செய்ததை அடுத்த மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.