அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிதம்பரம் நகரில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 78.6 சதவீதம்! 5 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

சிதம்பரம் நகரில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 78.6 சதவீத மாணவ,மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  நகரில் உள்ள நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தில்லை மெட்ரிக் பள்ளி, முஸ்தபா மெட்ரிக்

News image
Updated On :1 ஜூன் 2013, 12:48 pm

G.Sundararaj

சிதம்பரம் நகரில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 76.8 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிதம்பரம் நகரில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 78.6 சதவீத மாணவ,மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  நகரில் உள்ள நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தில்லை மெட்ரிக் பள்ளி, முஸ்தபா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சரசு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. ஸ்ரீகுருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள்- 2169 பேர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள்-1370 பேர். தேர்ச்சி சதவீதம் 57.6. தனியார் மெட்ரிக்  மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள்-633. இதில் தேர்ச்சி பெற்றவர்கள்-630 பேர். தேர்ச்சி சதவீதம் 99.7. சிதம்பரம் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மொத்தமாக தேர்வு எழுதியவர்கள்- 2802 பேர். தேர்ச்சி பெற்றவர்கள்-2000. நகரில் உள்ள பள்ளிகளின் மொத்த தேர்ச்சி சதவீதம் 78.6 ஆகும்.

சிதம்பரம் அரசு மகளீர் மேல்நிலைப்பள்ளி 87.2 சதவீதமும், நந்தனார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 41 சதவீதமும், நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 47 சதவீதமும், ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி 50 சதவீதமும், ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி 66 சதவீதமும், ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளி 72 சதவீதமும், ராணி சீதை ஆச்சி  மேல்நிலைப்பள்ளி 62 சதவீதமும், பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி 38 சதவீதமும், வீனஸ் மெட்ரிக்  மேல்நிலைப் பள்ளி 99 சதவீதமும், காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 99 சதவீதமும், நிர்மலா மெட்ரிக்  மேல்நிலைப் பள்ளி 100 சதவீதமும், முஸ்தபா  மெட்ரிக்  மேல்நிலைப் பள்ளி 100 சதவீதமும், சரசு மெட்ரிக்  மேல்நிலைப் பள்ளி 100 சதவீதமும், தில்லை மெட்ரிக் பள்ளி 100 சதவீதமும், ஸ்ரீகுருஞான சம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.