சிதம்பரம் அரசு கலைக்கல்லூரிக்கு பேருந்துகள் இயக்க எம்எல்ஏ கோரிக்கை
சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரிக்கு மாணவர்கள் நலன் கருதி கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என தமிழக போக்குவரத்துறை அமைச்சருக்கு சிதம்பரம்


சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரிக்கு மாணவர்கள் நலன் கருதி கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என தமிழக போக்குவரத்துறை அமைச்சருக்கு சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் சிதம்பரம்-கடலூர் செல்லும் புறவழிச்சாலையில் உள்ள சி.முட்லூரில் அரசு கலலைக்கல்லூரி அமைத்துள்ளது. சுமார் 3500 மாணவ, மாணவியர்கள் பயிலுகின்றனர். காலை, மாலை இரு ஷிப்டுகளாக வகுப்புகள் நடைபெறுகின்றன. இச்சாலையில் போக்குவரத்து வசதியில்லா காரணத்தால் சுமார் 3 கி.மீ தூரம் மாணவ, மாணவியர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இத்தாலையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தின் வழியாக போக்குவரத்து இயக்கப்படாமல் பழைய பாதையிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே சிதம்பரம்- கடலூர், பரங்கிப்பேட்டை வழித்தடங்களில் சி.முட்லூர் வழியாக சில பேருந்துகளையாவது புதிய பாலத்தின் வழியாக கல்லூரி நேரங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும்.
கொள்ளிடக்கரையை பலப்படுத்துவது என்ற பெயரால் கடந்த ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்தடுப்பு நடவடிக்கையால் தற்போது இச்சாலை குறுகலாக போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக மாறிவிட்டது. இதனால் சுமார் 10 கிராமங்களுக்கு மேல் போக்குவரத்து வசதியில்லாமல் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர்கள் பள்ளிகளுக்கு 4 கி.மீ தூரம் நடத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சிதம்பரத்திலிருந்து சிவபுரி வழியாக பெராம்பட்டு, சிதம்பரத்திலிருந்து சிவபுரி, வரகூர்பேட்டை வழியாக ஜெயங்கொண்டப்பட்டினம் ஆகிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும் என கடிதத்தில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...