சிதம்பரத்தில் பள்ளி கல்லூரி வாகனங்கள் ஆய்வு!
சிதம்பரம் பகுதியில் மொத்தம் 41 பள்ளிகளில் வேன் மற்றும் பஸ் உள்ளிட்ட 118 வாகனங்கள் உள்ளன. மேற்கண்ட வாகனங்களை சிதம்பரம் ஆக்ஸ்போர்டு பள்ளி வளாகத்தில் வட்டார போக்குவரத்துறை மோட்டார்


சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதிகளில் பள்ளி, கல்லூரி வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
சிதம்பரம் பகுதியில் மொத்தம் 41 பள்ளிகளில் வேன் மற்றும் பஸ் உள்ளிட்ட 118 வாகனங்கள் உள்ளன. மேற்கண்ட வாகனங்களை சிதம்பரம் ஆக்ஸ்போர்டு பள்ளி வளாகத்தில் வட்டார போக்குவரத்துறை மோட்டார் வாகன ஆய்வாளர் கே.சக்திகுமார் ஆய்வு செய்து பொதுசாலையில் ஒட்டுவத்கு தகுதி சான்றிதழை வழங்கினார்.
இதேபோன்று காட்டுமன்னார்கோயில் எம்.ஆர்.கே கல்லூரி வளாகத்தில் ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில் பகுதிகளைச் சேர்ந்த 73 பள்ளி வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர் கே.ரவீந்திரன் ஆய்வு செய்து சான்றிதழை வழங்கினார். ஆய்வின் போது பள்ளி, கல்லூரி வாகனங்களில் எமர்ஜென்சி கதவு, வாகனத்தில் ஸ்திரத்தன்மை, ஓட்டுநரின் அனுபவம், லைசென்ஸ், பர்மிட் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...