சிறப்பு எஸ்ஐகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என விழுப்புரம் சரக டிஐஜி முருகன் கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பணிபுரிந்து வரும் சிறப்பு எஸ்ஐகளுக்கான ஆலோசனை கூட்டம் கடலூர் போலீஸ் ஜாங்கீட் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் விழுப்புரம் சரக டிஐஜி முருகன் பேசியது, சிறப்பு எஸ்ஐகள் என்றாலும் சீனியர் ஏட்டுகள்தான். அனைத்து பணிகளையும் செய்ய தயாராக இருக்க வேண்டும். போலீஸ் நிலையத்தில் ஏட்டுகள் செய்கின்ற வேலைகளை நீங்களும் செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத பட்சத்தில் பாரா வேலையையும் பார்ப்பதற்கு தயக்கம்காட்ட கூடாது.
அதே போல சிறப்பு எஸ்ஐகள் முதல் தகவல் அறிக்கையை மட்டும் தயார் செய்யலாம். ஆனால் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய கூடாது. குற்றப்பத்திரிக்கையை எஸ்ஐகள் தான் தாக்கல் செய்ய வேண்டும். எந்தவித சிறு பிரச்னைக்கும் இடம் கொடுக்காமல் சிறப்பான முறையில் பணிபுரிய வேண்டும் என்றார்.
இதன் பின்னர் மாலையில் ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். பிறகு நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட எஸ்பி ஆ.ராதிகா, கூடுதல் எஸ்பி ராஜன் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!

அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! தலைவர்கள் வாக்களித்தனர் - நேரலை!
தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

