மின்சாரம் பாய்ந்து ஆலை ஊழியர் சாவு
கும்மிடிப்பூண்டியில், தனியார் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து ஊழியர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். சேலம் மாவட்டம், தமணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (30).


கும்மிடிப்பூண்டியில், தனியார் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து ஊழியர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். சேலம் மாவட்டம், தமணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (30). கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் எலக்ட்ரிஷியனாக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தொழிற்சாலையில் உள்ள இயந்திரத்தை பழுதுப்பார்த்து கொண்டிருந்த போது வெங்கடேஷ் மீது மின்சாரம் பாய்ந்தது.இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.இது குறித்த புகாரின் பேரில், கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...