கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வீட்டுக்குள் லாரி புகுந்த விபத்து : மேலும் ஒருவர் பலி

தூத்துக்குடியில் இருந்து நாகப்பட்டினத்துக்கு மீன் ஏற்றிச் சென்ற லாரி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல்சரகம் உப்பூர் கிராமத்தில் கிழக்குக் கடற்கரை சாலையோரமாக இருந்த மகாலிங்கம் என்பவரது வீட்டுக்குள் எதிர்பாராதவிதமாகப் புகுந்தது.

News image
Updated On :13 ஜூன் 2013, 6:49 am

ரவி

தூத்துக்குடியில் இருந்து நாகப்பட்டினத்துக்கு மீன் ஏற்றிச் சென்ற லாரி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல்சரகம் உப்பூர் கிராமத்தில் கிழக்குக் கடற்கரை சாலையோரமாக இருந்த மகாலிங்கம் என்பவரது வீட்டுக்குள் எதிர்பாராதவிதமாகப் புகுந்தது.

அதில், வீட்டுக்குள் இருந்த மகாலிங்கத்தின் மனைவி பானுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த செல்வரத்தினம் மகன் சபரிவாசன் (15) அதே ஊரில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை உயிரிழந்தார்.

இது குறித்து முத்துப்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.