கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

வெடிகுண்டு வீசி கோவில் தர்மகர்த்தா கடத்தல்: 6 பேர் மீது வழக்கு

சாத்தான் குளம் சைக்கா தெரு செல்லப்பா(70) இவர் பண்ணம்பாரை மாடத்தியம்மன் கோவில் தர்மகத்தாவாக உள்ளார். இவருக்கு 15 ஏக்கரில் நிலம் உண்டு. இவரது சகோதரி மகன் பொன்பாண்டி(37) என்பவர் தனக்கு அந்த

Updated On :18 ஜூன் 2013, 10:37 am

சாத்தான் குளம் சைக்கா தெரு செல்லப்பா(70) இவர் பண்ணம்பாரை மாடத்தியம்மன் கோவில் தர்மகத்தாவாக உள்ளார். இவருக்கு 15 ஏக்கரில் நிலம் உண்டு. இவரது சகோதரி மகன் பொன்பாண்டி(37) என்பவர் தனக்கு அந்த இடம் வேண்டுமென்று கூறிவந்துள்ளார். அதற்கு செல்லப்பா மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இன்று தோட்டத்திற்கு சென்றுவிட்டு சைக்கிளில் செல்லப்பா திரும்பிக் கொண்டிருக்கையில், பள்ளிவாசல் பத்து என்ற இடம் அருகில் பொண்பாண்டி மற்றும் அவரது சகோதரர்கள் சங்கரபாண்டி எ குமார்,வேல்துரை,சுடலையாண்டி உறவினர்கள் காளி,சின்ன இசக்கி ஆகியோர் சங்கரபாண்டி மீது வெடிகுண்டு வீசி தாக்கி,பின் அவரை காரில் கடத்தி சென்று வலசை கிணறு என்ற ஊரில் உள்ள வீட்டில் அடைத்து வைத்தனர்.யாரும் இல்லாத நேரத்தில் செல்லப்பா தன் வீட்டிற்கு தகவல் கொடுத்தார்.இது குறித்துசெல்லப்பா வீட்டினர் போலீசில் புகார் செய்தனர்.டி.எஸ்.பி ராஜகோபால் தலையில் போலீஸார் அவரை பத்திரமாக மீட்டனர். ராஜகோபால் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடிவருகின்றனர். வெடிகுண்டு வீச்சில் காலில் காயம் அடைந்ததால் செல்லப்பா பாளை ஹைகிரவுண்டு மருத்துவமனையில் சிகிச்ச்கைக்காக சேர்க்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.