விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மாலையில் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலர்கள் 100 பேருக்கு உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு, கிராம ஊராட்சிகளில் செயலாளர்களுக்கு பணி வரைமுறை செய்து ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி பணியாளர்கள் சங்கத்தினர் மாலை 4.45 மணி முதல் 5 மணி வரையில் பணி செய்யாமல் வெளிநடப்பில் ஈடுபட்டனர். அதேபோல், விருதுநகர் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களும் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
எனவே பணி முடியும் நேரத்திற்கு முன்னதாக ஈடுபட்டதால் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. இதேபோல் இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகிற ஜூலை-2ம் தேதி பணியாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்த விடுப்பு எடுக்கும் போராட்டம் நடத்தவும் இருப்பதாக மாவட்ட ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்யூவி வாகனம் மோதி டாக்ஸி ஓட்டுநா் படுகாயம்! மேற்கு தில்லியில் சம்பவம்!

உக்ரைனில் 6 பேரை சுட்டுக் கொன்ற நபரை என்கவுண்டர் செய்த போலீஸ்! வணிக வளாகத்தில் சிறைப்பிடிக்கப்பட்டோா் மீட்பு!

எதிா்பாா்ப்புகள் என்ன? குறுந்தொழில்பேட்டைகள், காா் உற்பத்தி ஆலை

நெசவு தொழில் வளா்ச்சிக்கு முன்னுரிமை: கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளா்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

