கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

வரதட்சணை கேட்டு மனைவிக்கு சித்ரவதை: ஆயுதப்படை காவலர் கைது

விருதுநகர் அருகே 2-வது மனைவியிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியதாக ஆயுதப்படை பிரிவு காவலரை மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

Updated On :20 ஜூன் 2013, 11:56 am

விருதுநகர் அருகே 2-வது மனைவியிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியதாக ஆயுதப்படை பிரிவு காவலரை மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் தரப்பில் வியாழக்கிழமை கூறியதாவது: விருதுநகர் அருகே அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜன்(36). இவர் ராணுவத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது, காவல் துறையில் பணிக்கு சேர்ந்து விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை பிரிவு காவலராக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே இவருக்கு திருமணமாகி முதல் மனைவி உயிரிழந்துவிட்டாராம்.

இதையடுத்து, இரண்டாவதாக அதே பகுதியைச் சேர்ந்த தேன்மொழி(34) என்பவரை 2 ஆண்டுகளுக்கு முன்பு  திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் திருமணத்தின் போது நகை, பணம் மற்றும் போதுமான அளவிற்கு  சீர்வரிசை பொருள்கள் ஆகியவை வழங்கப்பட்டதாம். ஆனால் மறுபடியும் நகை பணம் கூடுதலாக வாங்கி வந்தால் தான் என்னோடு வாழ முடியும் என கூறி, தொடர்ந்து  கொடுமைப்படுத்தியும், சித்ரவதை செய்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம்.

இது தொடர்பாக தேன்மொழி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணி்ப்பாளரிடம் நேரில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் உடனே ஆயுதப்படை போலீஸார்   நாகராஜனை மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.