விருதுநகர் கச்சேரி சாலையில் வியாழக்கிழமை இரவு மேற்கு காவல் நிலைய போலீஸார் தீவிரமாக வாகனத் தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக லட்சுமி நகரை சேர்ந்த செபாஸ்டின் மகன் கண்ணன்(40) வந்துள்ளார். அவரை சார்பு ஆய்வாளர் குருநாதன் நிறுத்தி வாகனத் தனிக்கையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வாகனத்திற்கான ஆவணம் மற்றும் காப்பீடு சம்பந்தமான ரசீது உள்ளிட்டவைகளை காட்டும் படி கூறினாராம்.
அதெல்லாம், கையோடு கொண்டு வரவில்லையென கண்ணன் கூறி மறுத்துள்ளார். அதையடுத்து, வாகனத்தை காவல் நிலையத்தில் நிறுத்தி விட்டு ஆவணங்கள் கொண்டு வந்து காட்டி எடுத்துச் செல்லும்மாறு கூறினாராம். அதற்கு, ஆவணங்கள் எல்லாம் அடிக்கடி காட்டவேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி கண்டபடி பேசியும், வாகனத்தையும் காவல் நிலையத்தில் நிறுத்த முடியாத எனக் கூறி தகராறு செய்தாராம். அதோடு, பணி செய்ய விடாமல் தடுத்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக சார்பு ஆய்வாளர் குருநாதன் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் கண்ணனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணம்

சமூக ஊடகம் மூலம் சிறுவனுடன் நட்பு: தப்பியோடிய சிறுமி மீட்பு

பிடிவாதம் தளர வேண்டும்!

எஸ்யூவி வாகனம் மோதி டாக்ஸி ஓட்டுநா் படுகாயம்! மேற்கு தில்லியில் சம்பவம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

