அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் மாவட்டத்திலிருந்து யாத்திரை சென்றவர்களின் உறவினர்க்கு தகவல்  மையம் ஏற்பாடு

விருதுநகர் மாவட்டத்திலிருந்து கேத்ரிநாத், பத்ரிநாத் போன்ற பகுதிகளுக்கு யாத்திரையாக சென்றவர்களை மீட்பதற்கு வசதியாக விவரங்களை உறவினர்கள உடனே அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On :21 ஜூன் 2013, 11:55 am

விருதுநகர் மாவட்டத்திலிருந்து கேத்ரிநாத், பத்ரிநாத் போன்ற பகுதிகளுக்கு யாத்திரையாக சென்றவர்களை மீட்பதற்கு வசதியாக விவரங்களை உறவினர்கள உடனே அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

வடமாநிலங்களான உத்தரிகண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் புதுதில்லி போன்ற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இம்மழையின் காரணமாக கங்கை, யமுனா போன்ற ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், போக்குவரத்து வாகனங்கள் மூழ்கி, ஏராளமான உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இது குறித்து தகவல் அறி்ந்து கொண்ட தமிழக முதல்வர் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் யாத்திரையாக சென்றவர்களை மீட்பதற்கு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும், மழையால் பாதிப்பிலிருந்து மீட்கும் வகையில், தமிழகத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் பற்றிய தகவல்களை உடனே அளிப்பதற்கு ஏதுவாக புதுதில்லி தமிழ்நாடு இலத்தில் 24 மணிநேரம் செயல்படும் தொலைபேசி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே விருதுநகர் மாவட்டத்திலிருந்து கேத்ரிநாத், பத்ரிநாத் யாத்திரை சென்ற யாத்திரிகர்கள் பத்திரமாக உள்ளனர். அதனால், இவர்களை பற்றிய முழு விவரங்களான புகைப்படம், செல்போன் எண் ஆகியவற்றை யாத்திரை சென்றவர்களின் உறவினர்கள் உடனே மாவட்ட நிர்வாகத்தினரிடம் தெரிவிக்க வேண்டும். இதை வைத்து யாத்திரை சென்றவர்களை பத்திரமாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.