/

அரசுப் பள்ளிகளை விஷமிகள் சேதப்படுத்தியதால் ஆத்திரம்: பஸ் சிறைப்பிடிப்பு

திருச்சி - லால்குடி அருகே, அரசுப் பள்ளிகளை உடைத்ததாகவும், கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கி, சேதப்படுத்தியதாகவும் கூறி, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

News image
Updated On :24 ஜூன் 2013, 7:08 am

ராஜேஷ் கண்ணன்

திருச்சி - லால்குடி அருகே, அரசுப் பள்ளிகளை உடைத்ததாகவும், கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கி, சேதப்படுத்தியதாகவும் கூறி, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

லால்குடி ஆதிதிராவிடர் நலப்பள்ளி, லால்குடியில் உள்ள ஒரு பள்ளி ஆகியவற்றில், ஜன்னல்கள், கண்ணாடிகளை உடைத்து, சுவர்களை சேதப்படுத்தி, வகுப்பறைக்குள் சென்று மது அருந்தி, பாட்டில்களை உடைத்துப் போட்டு விஷமிகள் சிலர் அடாவடி செய்வது குறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதால் பொதுமக்கள் கோபம் கொண்டனர். இந்நிலையில், இன்றும் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் காலை இது போல் உடைக்கப்பட்டிருந்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கிருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் அரசு பஸ்ஸை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீஸார், தாசில்தார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.