வழக்குரைஞர்கள் போராட்டம்: திருவண்ணாமலை கோயில் பிரசாதக் கடை உரிமையாளர் கைது
நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கெட்டுப் போன பிரசாதம் விற்கப்படுவதைத் தட்டிக் கேட்ட மாவட்ட இந்து முன்னணி தலைவரும் வழக்குரைஞருமான டி.எஸ்.சங்கரை தாக்கிய


நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கெட்டுப் போன பிரசாதம் விற்கப்படுவதைத் தட்டிக் கேட்ட மாவட்ட இந்து முன்னணி தலைவரும் வழக்குரைஞருமான டி.எஸ்.சங்கரை தாக்கிய பிரசாதக் கடை உரிமையாளர் வைத்தீஸ்வரன் என்கிற வைத்தியநாதன் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, தாக்கப்பட்ட சங்கர் வழக்குரைஞர் என்பதால், அவரைத் தாக்கிய நபர் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று இரவு தீர்மானித்து இன்று காலை முதல் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதை அடுத்து இன்று காலை போலீஸார் வைத்தீஸ்வரனை கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...