விருதுநகர் மாவட்ட திமுக மக்களவைத் தேர்தல் நிதியளிப்பு விழா நிகழ்ச்சியில் வருகிற 29-ம் தேதி திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கயுள்ளார்.
இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட திமுக செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
விருதுநகர் மாவட்ட திமுக கழகம் சார்பில் கலைஞரின் 90-வது பிறந்த நாள் விழா மற்றும் மக்களவைத் தேர்தல் நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் ஆகியவை தேசபந்து மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் திமுக கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை வழங்கயுள்ளார்.
எனவே இக்கூட்டத்தில் பொதுமக்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், கழகத்தின் பிற அணியினர், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் கழகத்தின் இளைஞரணி செயல் வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணம்

சமூக ஊடகம் மூலம் சிறுவனுடன் நட்பு: தப்பியோடிய சிறுமி மீட்பு

பிடிவாதம் தளர வேண்டும்!

எஸ்யூவி வாகனம் மோதி டாக்ஸி ஓட்டுநா் படுகாயம்! மேற்கு தில்லியில் சம்பவம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

