அருப்புக்கோட்டையில் மாநகர காவல் துறை அலுவலத்தின் பெண் அதிகாரியை வழிமறித்து 4 சவரன் நகையை பைக்கில் வந்து பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறியதாவது: அருப்புக்கோட்டை அருகே புளியம்பட்டியைச் சேர்ந்த ராமசந்திரனின் மனைவி ரேவதி(56). இவர் மதுரை மநாகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், புதன்கிழமை மாலையில் வழக்கம் போல் பணிமுடிந்து மதுரை ரயில் நிலையத்திலிருந்து ரயிலேறி விருதுநகருக்கு வந்துள்ளார். இங்கிருந்து பஸ்ஸில் ஏறி புளியம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்றாராம். அப்போது பின்புறமாக பைக்கில் வந்த மர்ம நபர்கள் திடீரென வழிமறித்து, ரேவதியின் கழுத்தில் கிடந்த 4 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.
உடனே இது தொடர்பாக அருப்புக்கோட்டை நகர காவல் நிலையத்தில் ரேவதி புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பைக்கில் வந்து நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணம்

சமூக ஊடகம் மூலம் சிறுவனுடன் நட்பு: தப்பியோடிய சிறுமி மீட்பு

பிடிவாதம் தளர வேண்டும்!

எஸ்யூவி வாகனம் மோதி டாக்ஸி ஓட்டுநா் படுகாயம்! மேற்கு தில்லியில் சம்பவம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

